ஏன்? எதற்காக? இந்த சலசலப்பு நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி
பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிக்கலாம் என்ற 18 ஆவது திருத்தத்திற்கு
அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்தது.
இவ்வாறானதொரு நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
ஒழிக்கப்பட வேண்டுமென்ற சமூக அமைப்பினை உருவாக்கி அதற்கான
பிரசாரங்களை மேற்கொண்டு மக்கள் ஆதரவை கோரும் சோபித தேரரை இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் சந்தித்துள்ளமையே அரசுக்குள் சலசலப்பை உருவாக்க
காரணமாகும்.
தெற்காசியாவில் சர்வாதிகாரத்திற்கு வழியை ஏற்படுத்தும்
அரசியலமைப்புக்களை மாற்றி ஜனநாயகத்தை ஏற்படுத்தும்
அமெரிக்காவின் திட்டம் பங்களாதேஷில் ஆரம்பித்து மாலைதீவு வரை நீண்டு
சென்றது.
இதன்போது இந்நாடுகளை ‘விழுங்குவதற்கு’ சீனா, பறக்கும் நாகங்களைப் (‘‘டிராகன்’’) போல் காத்திருந்தது.
ஆனால், சீனாவுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஏனென்றால் அமெரிக்காவின் திட்டத்திற்கு தெற்காசியாவின் வல்லரசான
இந்தியாவின் ஆசீர்வாதம் கிடைத்தமையே இதற்கு மூல காரணமாக அமைந்தது.
2007 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டம் ஆரம்பமாகி மக்கள் வீதியில் இறங்கினர்.
இதனால், அந்நாட்டில் மாபெரும் அரசியல் நெருக்கடி தோன்றியது.
இதனை தீர்ப்பதற்காக இராணுவத்தினரின் உதவியுடன் இடைக்கால நிர்வாக ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
இவ் ஆட்சியின் ஊடாக பங்களாதேஷில் ஜனநாயக ஆட்சியை
ஏற்படுத்துவதற்காக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை
நடத்துவதற்கு பின்னணியில் அமெரிக்கா பெரும் பங்காற்றியது.
அக்காலத்தில் பங்களாதேஷில் அமெரிக்கத் தூதுவராக பற்றீசியா
பூட்டநிங் பதவி வகித்தார். இவர் இலங்கைக்கான தூதுவராகவும் பதவி
வகித்தவராவார்.
அன்றைய அமெரிக்கர் தூதுவர் பங்களாதேஷின் தேர்தல் ஆணையாளரை அழைத்து
பேச்சுவார்த்தை நடத்தினார். இது பங்களாதேஷில் பெரும் சர்ச்சையை
சலசலப்பை தோற்றுவித்தது.
அதுமட்டுமல்லாது பிரதம நீதியரசர், அரச, எதிர்க்கட்சி தலைவர்களை
சந்தித்து பேச்சுக்களை நடத்தியமையும் பங்களாதேஷில் பெரும்
சலசலப்பை தோற்றுவித்தது. இதன் நோக்கம் பங்களாதேஷில் ஜனநாயகத்தை
தோற்றுவிப்பதாகவே அமைந்தது.
எப்படியாயினும் இடைக்கால அரசாங்கத்தினூடாக பங்களாதேஷில்
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதில்
அமெரிக்க தூதுவர் வெற்றி கண்டார்.
அன்று புதிய வாக்காளர்களை பதிவு செய்வதன் மூலம் தேர்தல்கள் ஆணையாளர்
பெரும் பங்களிப்பை வழங்கினார். அது மட்டுமல்லாது அந்நாட்டின்
சிவில் அமைப்புக்களும் அமெரிக்க தூதுவருக்கு மிக்க பலமாக இருந்தன.
பங்களாதேஷிற்கு முன்பதாக நேபாளத்தில் தெற்காசியாவில்
ஜனநாயகம் கோலோச்சும் அரசாங்கத்தை உருவாக்கும் தனது பரீட்சார்த்த
நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்தது.
2006 ஆம் ஆண்டு மாவோ வாதிகளின் கிளர்ச்சி காரணமாக நேபாளத்தின்
அரசாட்சி பெரும் நெருக்கடிக்கு உள்ளானதோடு அரசியல் ஸ்திரமற்ற
நிலைமையும் உருவாகியது. இந்த நெருக்கடியை தீர்த்து பங்களாதேஷைப்
போன்று நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் விடயத்தில் அமெரிக்கா
பெரும் பங்காற்றியது.
அரசரை வெளியேற்றி மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான
அரசியலமைப்பை உருவாக்க மாவோ வாதிகளின் (கிளர்ச்சியாளர்கள்)
உதவியுடன் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த அமெரிக்காவுக்கும்
சர்வதேசத்திற்கும் முடியுமானது.
ஆனால், அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் வீழ்ச்சி கண்டதால் நேபாளத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை தோன்றியது.
அமெரிக்கா எதிர்பார்த்த அந்நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பை
உருவாக்க ஆட்சியைக் கைப்பிடித்தவர்களாலும் அரசியல் கட்சிகளாலும்
முடியாமல் போனதே நேபாளத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாக
காரணமாக அமைந்தது.
தற்போது மீண்டும் அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும்
தலையீட்டுடன் நேபாளத்தின் அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அமெரிக்காவும் சர்வதேசமும்
வெற்றி கண்டுள்ளன.
அந்த இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நேபாளத்தின் பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் மூலம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை
நடத்தவும் ஜனநாயக ரீதியான அரசியலமைப்பை உருவாக்கவும் தயார்
செய்து கொள்வதற்காக அமெரிக்காவும் சர்வதேசமும் தலையிட்டு
நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
நேபாளத்தின் அரசாட்சியை இல்லாதொழித்தமையானது
அமெரிக்காவுக்கும் சர்வதேசத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என்றே
கூற வேண்டும்.
மாலைதீவிலும் கடந்த வருடத்தில் அமெரிக்காவும் சர்வதேசமும்
இவ்வாறான தலையீட்டையே மேற்கொண்டது. பல வருடங்களாக தொடர்ச்சியாக
மாலைதீவை ஆட்சி செய்த அப்துல் கயூம் அந்நாட்டின் ஜனநாயகத்தை
ஆரம்பகாலத்திலேயே சீர்குலைத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும்
இணைந்து மாலைதீவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைத்து
முன்னணியொன்றை அமைத்து ஜனநாயகத்தை ஏற்படுத்த முயற்சியை
மேற்கொண்டன.
கையூம் தோல்வி கண்டு நஷீர் ஆட்சிக்கு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியே
காரணமாக அமைந்தது. அதுவும் புதிய அரசியலமைப்பின் கீழேயே அவர்
ஆட்சியை கைப்பிடிக்கின்றார்.
அமெரிக்கா, சர்வதேசத்தின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த நஷீட், கையூமை
போன்று மாலைதீவின் எதிர்க்கட்சிகளை அடக்குமுறைக்கு
உள்ளாக்குகின்றார். இதனை அமெரிக்காவும் சர்வதேசமும் தடுத்து
நிறுத்துகிறது. ஆனால், நஷீட் மாலைதீவின் பிரதம நீதியரசரை கைது
செய்யும் அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக செயற்படுகிறார்.
இதனால் நஷீட்டை பதவியிலிருந்து வெளியேற்றி உப ஜனாதிபதியை பதவியில் அமர்த்தும் திட்டம் செயற்பட ஆரம்பிக்கப்படுகிறது.
இதன் பின்னர் உப ஜனாதிபதி மாலைதீவின் ஜனாதிபதி ஆவதோடு நீதியானதும்
சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதாக அமெரிக்காவிற்கும்
சர்வதேசத்திற்கும் உறுதியளிக்கின்றார்.
இதன்படியே அண்மையில் மாலைதீவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.
தெற்காசியாவில் சர்வாதிகாரத்திற்கு வழியைத் தயார் செய்யும்
அரசியலமைப்புக்களை இல்லாதொழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்தும்
அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான மார்க்க வரைபடம் பங்களாதேஷில் ஆரம்பித்து
மாலைதீவு வரை இவ்வாறே வியாபித்தது ஆகும்.
அமெரிக்காவின் திடடத்திற்கு தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவின் முழுமையான ஆசீர்வாதம் கிடைத்தமையால் திட்டங்கள் வெற்றி பெற்றது.
இதன் காரணமாக பங்களாதேஷையும் மாலைதீவையும் விழுங்குவதற்காக பறக்கும் முதலைகள் போல் காத்திருந்த சீனாவுக்கு முடியாமல் போனது.
தெற்காசியாவில் இவ்வாறான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த அமெரிக்கா,
இலங்கையின் 18 ஆவது அரசியலமைப்பை எதிர்த்த அமெரிக்கா நிறைவேற்று
அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு மாற்றப்பட
வேண்டுமென்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மாதுருவாவே சோபித தேரரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சந்தித்தார் என்றால்
அது சோபித தேரரின் திட்டத்தை ஆதரிப்பதாகவும் அமைகிறது. இதனை சிறிய விடயமாக
நினைக்க முடியாது.
நன்றி: மெளபிம
(தமிழில்: ப. பன்னீர்செல்வம்)

0 comments:
Post a Comment