
இதற்கான முன்னெடுப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற தனது செயற்குழு கூட்டத்தில் எடுத்தது.
இதுவரை டெண்டுல்கர் 198 கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணி தமது அடுத்த டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்காவில் விளையாடத் திட்டமிட்டிருந்தது.
எனினும் டெண்டுல்கரின் விருப்பத்துக்கு ஏற்ப, மேற்க்கிந்தியத் தீவுகள்
அணியை எதிர்வரும் நவம்பர் இந்தியாவுக்கு வந்து விளையாடுமாறு அழைப்பு ஒன்று
விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை மேற்க்கிந்தியத் தீவுகள் ஏற்றுக் கொண்டு, இந்தியா வந்தால், அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடுவார்கள் என்று கொல்கத்தாவிலுள்ள இந்து பத்திரிகையின் செய்தியாளர் சபாநாயகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் திட்டமிடபடி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கான
இந்திய கிரிக்கெட் அணியின் பயணம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.
இந்திய அழைப்பை ஏற்று மேற்க்கிந்தியத் தீவுகள் அணி நவம்பர் மாதம்
இந்தியா வந்தால், நடைபெறவுள்ள இரண்டு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளும்
கொல்கத்தா மற்றும் மும்பை நகரில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இந்த மாதம்
29 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் டெண்டுல்கரின் விருப்பத்துக்கு ஏற்ப, மேற்க்கிந்தியத் தீவுகள்
அணியை எதிர்வரும் நவம்பர் இந்தியாவுக்கு வந்து விளையாடுமாறு அழைப்பு ஒன்று
விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை மேற்க்கிந்தியத் தீவுகள் ஏற்றுக் கொண்டு, இந்தியா வந்தால்,
அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில்
ஆடுவார்கள் என்று கொல்கத்தாவிலுள்ள இந்து பத்திரிகையின் செய்தியாளர்
சபாநாயகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment