தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
அமைச்சர பிமல் ரத்நாயக்க தலைமையிலான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தவிசாளர் பதவியிலிருந்து விலகிய மூன்றாவது அதிகாரி பந்துர திலீப விதாரண ஆவார்.
ஏற்கனவே, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தவிசாளராக பணியாற்றிய ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தவிசாளராக பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment