ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகமான MEHR இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளதாக அந்த செய்தி கூறுகின்றது.
மேலும், அவர்களுடன் பயணித்த ஏனைய ஐந்து பேரும் வீரமரணம் அடைந்ததாக குறித்த செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
எனினும் ஈரானிய அரச ஊடகமான ஐஆர்என்ஏ இன்னும் மரணச் செய்தியை அறிவிக்கவில்லை.
0 comments:
Post a Comment