அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அங்கீகாரத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் ஐ.நா.அபிவிருத்தி உதவித் திட்டத்தில் இம்மாகாண அலுவலகம் மட்டக்களப்பு நகரில் மண்முனை வடக்குபிரதேச செயலக மேல்மாடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித்இ ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமாரஇதேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்கிரமசிங்கஇ அத்திணைக்களத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.நசீர் மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் பீ.எஸ்.எஸ்.சார்ள்ஸ் இபிரதேச செயலாளர்கள் இஉதவி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன் உட்பட தமிழ்இமுஸ்லிம்இகிறிஸ்தவ மதகுருமார்கள் அரச அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இம்மாகாண அலுவலகம் ஊடாக கிழக்கு மாகாண மக்கள் இதுவரைகாலமும் இத்திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்தில் முடித்துக் கொண்ட கருமங்களை இம்மாகாண அலுவலகம் இலகுவாக வழங்குமென்றும் மட்டக்களப்புஇ அம்பாரைஇதிருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பயனளிக்குமென்றும் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொது மக்களின் தகவல்கள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் கொழும்பில் அமைந்துள்ள ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்படுவதன் மூலம் அங்கிருந்து தேசிய அடையாள அட்டைகள் இரு வாரகாலதிற்குள் வழங்கப்படும். அங்கிருந்து கிடைக்கப் பெறும் அடையாள அட்டைகளை ஒருவாரகாலத்திற்குள் இம்மாகாண அலுவகத்தின் ஊடாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment