எம்.ஐ.எம்.சம்சுதீன் -
இன்று அதிகாலை சாய்ந்தமருதுக் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் மதில் சுவர்களை உடைத்துள்ளதுடன், வீடொன்றில் உள்ள நெல் மூடைகளையும் நாசம் செய்ய முற்பட்டுள்ளன. இதன் போது, பொது மக்கள் சத்தமிட்டு யானைகளை விரட்டியுள்ளார்கள்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் திட்டமிடல் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஏ.எல்.எம்.முக்தார் என்பரின் வீட்டின் சுற்று மதில் சுவரையும், பக்கத்தில் உள்ள மற்றுமொரு சுற்று மதில் சுவரையும் காட்டு யானைகள் தாக்கியுள்ளன.இன்று அதிகாலை சாய்ந்தமருதுக் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் மதில் சுவர்களை உடைத்துள்ளதுடன், வீடொன்றில் உள்ள நெல் மூடைகளையும் நாசம் செய்ய முற்பட்டுள்ளன. இதன் போது, பொது மக்கள் சத்தமிட்டு யானைகளை விரட்டியுள்ளார்கள்.
முக்தாரின் வீட்டில் உள்ள நெல்லை யானைகள் சேதப்படுத்திக் கொண்டிருந்த போதே பொது மக்கள் சத்தமிட்டுள்ளார்கள்.
இதே வேளை, தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
ஆம்பாரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் காட்டு யானைகள் ஏற்கனவே தாக்குதல்களை மேற்கொண்டு சேதங்களை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment