• Latest News

    September 11, 2013

    தாயொருவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவத்தினர் மூவருக்கு விளக்கமறியல்

    அநுராதபுரம், ஹொரவபொத்தான பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் சந்தேகநபர்களான 3 இராணுவ வீரர்களும் அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களான இராணுவ வீரர்கள் மூவரும், பலாத்காரத்திற்கு இலக்கான பெண் மற்றும் அவரின் உறவினர் ஆகியோரால் நேற்று (10) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
    இதனையடுத்து சந்தேகநபர்களான முன்னாள் இராணுவ கோப்ரல் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பிட்டிகொல்லாவ நீதவானும், மாவட்ட நீதிபதியுமான கயான் மீகஹகே உத்தரவிட்டார்.
    இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், நான்காம் சந்தேகநபரை முறைபாட்டாளர் தரப்பு சாட்சியாளராக பெயரிடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

    ஹொரவபொத்தான பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவரே பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் இராணுவ மேஜராக சேவையாற்றுகின்றார்.

    அத்துடன் அந்த பெண்ணின் மூன்று புதல்வர்களில் இருவர் இராணுவத்திலும், ஒருவர் விமானப் படையிலும் சேவையாற்றி வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தாயொருவரை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவத்தினர் மூவருக்கு விளக்கமறியல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top