யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியை சற்று முன்னர் சென்றடைந்துள்ளது.
இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.
யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் வந்தடைந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும் என்று அறிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 8.15 க்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments:
Post a Comment