208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவிக்கின்றது. பெப்பிரவரி மாதம் முதற்பகுதியில் தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் மற்றும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அடங்கியதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுவை கோருவதற்கு தேர்தல்கள் ஆணையம் தீர்மானித்தது.
ஆறு பிரதேச சபைகளை சேர்ந்த ஆறு வாக்களார்கள் சமர்ப்பித்த இந்த ரீட் மனு தொடர்பாக வழக்கை முடிவுக்கு கொண்டுவர மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது. குறித்த மனுக்களை விலக்கிக்கொள்வதாக மனுதாரர்களின் சட்டதரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது. ஏற்கனவே இந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் நான்காம் திகதி வரை அமுலில் இருக்கும் வரை வழங்கப்பட்டபோதிலும் அந்த இடைக்கால தடையுத்தரவும் நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதேநேரம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொட்ரபாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

0 comments:
Post a Comment