அமைச்சரவையிலுள்ள இனவாத அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கட்டளைகளுக்கு இயங்குகின்ற சில அமைச்சர்கள் இருக்கின்றனர் அவர்களின் சர்ச்சைகளினால் 13 ஆவது திருத்தத்திற்கான திருத்தம் பிற்போடப்பட்டது.
பத்தரமுல்ல தேசிய சுதந்திர முன்னணி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டின் போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி எமது கட்சி நடாத்திய மே தினக் கூட்டத்தில் வடக்கின் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாகாணசபையின் 13 ஆவது திருத்திலுள்ள பொலிஸ், காணி மற்றும் சில அதிகாரங்களை இல்லாதொழிக்குமாறு அரசுக்கும் ஐனாதிபதிக்கும் கூறியிருந்தோம்.
ஜனாதிபதி அதற்காக துரித நடவடிக்கை எடுத்தும் அமைச்சரவையில் இதற்கான பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது அமைச்சரவையில் உள்ள இனவாத அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் கட்டளைகளுக்கு இயங்குகின்ற சில அமைச்சர்களும் நடாத்திய சர்ச்சைகளினாலேயே இச் சட்டம் பிட்போடப்பட்டது.பத்தரமுல்ல தேசிய சுதந்திர முன்னணி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டின் போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி எமது கட்சி நடாத்திய மே தினக் கூட்டத்தில் வடக்கின் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் மாகாணசபையின் 13 ஆவது திருத்திலுள்ள பொலிஸ், காணி மற்றும் சில அதிகாரங்களை இல்லாதொழிக்குமாறு அரசுக்கும் ஐனாதிபதிக்கும் கூறியிருந்தோம்.
21 ஆம் திகதி வடக்கில் தேர்தல் முடிவடைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கை கைப்பற்றி அவர்கள் தற்பொழுது முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்துவார்களேயானால் இதற்கான முழுப்பொறுப்பையும் இந்த இனவாத அரசியல்வாதிகளும் இதர அமைச்சர்களும் தான் ஏற்கவேண்டும்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மட்டும் வடக்கில் தேர்தல் விஞ்ஞாபனமொன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தி மக்களிடம் வாக்கு கேட்கின்றது. ஆனால் மக்கள் ஐக்கிய முன்னணியோ, ஜ.தே.கட்சி, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வடக்கிலோ அல்லது வடமேல் மாகாணத்திலோ, மத்திய மாகாணத்திலோ தேர்தல் விஞ்ஞாபனமொன்றை வெளியிடவில்லை.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனியான நாடு ஒன்றை பெறுவதற்காகவும் அதற்காக வடக்கில் எங்களுக்கு பெரும்பாலான ஆணையை தந்துள்ளார்கள் என்றும் சர்வதேசத்திற்கும் சொல்லுவதற்கும் இந்த விஞ்ஞானபனத்தை வெளியிட்டுள்ளார்கள். இதன் முலம் தமிழ் இளைஞர்களின் கழுத்தில் சயணைட் குப்பிகளை மீண்டும் தொங்கவிட்டு அதன் மூலமாக மேலும் 10 வருடத்திற்கு கூட்டமைப்பு அரசியல் செய்ய விரும்புகின்றது.
விக்னேஸ்வரன் கொழும்பில் வாழ்ந்து படித்து, சட்டதொழில் செய்து அதில் அவர் நீதிபதியாகிவிட்டு வடக்கில் உள்ள இளைஞர்களை மீள போராட்டத்திற்கு அழைத்து அதில் அவர் சவாரி செய்யப் பார்க்கின்றார். இரண்டு பக்கத்திலும் அப்பாவி இளைஞர்கள் பழிக்காடகி விட்டனர். இவ் இளைஞர்கள் சமூகம் சிறந்த ஆற்றல் உள்ள பரம்பரையாகும். இவ்வாறான ஒரு யுகத்தை மீள ஆரம்பிப்பதற்கு மீண்டும் ஒரு பிரபாகரனை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் அப்பாவி தமிழ் இளைஞர்கள் துணைபோக வேண்டாம்.
விக்னேஸ்வரன் அல்லது சம்பந்தன் இன்றேல் கூட்டமைப்பினர் தங்களுடைய எந்த உறுப்பினர்களது பிள்ளைகளையும் விடுதலைப்புலிகளில் சேர்ந்து யுத்தம் செய்ய வில்லை. இவர்களது பிள்ளைகள் இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் நல்ல தொழில் செய்துகொண்டு சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்காக வெள்ளவத்தையில் வாழும் யாழ் மக்களையும் வடக்குக்குச் சென்று வாக்களிக்கச் சொல்கின்றனர். அதற்காக வடக்கில் உள்ள சில கிராம அதிகாரிகளிடம் தற்காலிக அடையாள அட்டை வழங்கும்படியும் கூட்டமைப்பு கூறிவருகின்றது. இவ்வியடம் சம்பந்தமாக எமது கட்சி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணசபைக்கு சுயநிர்ணய ஆட்சி, நிதி, காணி, நீதி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் இது தனியானதொரு இராஜியமாகும். வடக்கின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்துள்ளேன். இவை அனைத்தும் சிங்கள ஊடகங்களில் வெளிவரவில்லையெனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார் .
வடக்கில் கூட்டமைக்கு பெரும்பான்மை ஆணையிருந்தால் தெற்கு வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளிலும் ஐனாதிபதிக்கும் இந்த அரசுக்கும் பெரும்பான்மை உள்ளது என்பதை சர்வதேச சமுகம் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

0 comments:
Post a Comment