அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள கடற்படை தளமொன்றுக்குள்
நுழைந்த நபரொருவர் நேற்று காலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள், பொலிஸார் என 15 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன்
அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலை மேற்கொண்ட நபரை அமெரிக்க சிறப்பு ஆயுதப்படை பிரிவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
குறித்த நபரின் பெயர் அரோன் எலக்ஸிஸ் எனவும் அவர் முன்னாள் கடற்படை வீரர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அவர் 4 வருடங்கள் கடற்படையில் பணியாற்றியுள்ளதுடன் 2010 ஆம்
ஆண்டு
இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று காரணமாக
பதவியிலிருந்து விலக்கப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரிடம் 3 வகையான துப்பாக்கிகள் இருந்துள்ளன.
எனினும் அதிகாரிகள் தொடர்ந்தும் தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாகவும், கொல்லப்பட்டவர்கள் தேசப்பற்றாளர்கள் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment