இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களில் இதுவரையில் 11 ஆயிரத்து 562 பேர்
புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும்,
இன்னும் 238 பேர் புனர்வாழ்வு பயிற்சி பெற்றுவருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்ம் முடிவடைந்ததும், பொது
மன்னிப்பளிக்கப்படும் என்று அரசாங்கம் தமக்களித்த உறுதிமொழியையடுத்து,
இராணுவத்தினரிடம் தாங்கள் சரணடைந்ததாகவும், அதன் பின்னர் தாங்கள் பல
இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் புனர்வாழ்வுப்
பயிற்சியளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும்
விடுதலையாகியிருப்பவர்களில் சிலர் கூறினர்.
இந்த வைபவத்தில்
உரையாற்றிய மனித வள அமைச்சர் டி.யு குணசேகர ,
'இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுமார் 12 ஆயிரம் பேரையும் நற்பிரஜைகளாக மாற்றி சமூகத்தில் இணைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட புனர்வாழ்வுப் பயிற்சித் திட்டமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைந்து வாழ்கின்றார்கள். இவர்கள் தொடர்பாக எவருமே இதுவரையில் எந்தவிதமான முறைப்பாடுகளையும் செய்ததில்லை. மனித உரிமை அமைப்புக்களும்சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகளும் சரி, ஐக்கிய நாடுகளோ அல்லது சர்வதேச நாடுகளோ இதுபற்றி எந்தவிதமான குறைகளையும் அல்லது, முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. இதன் மூலம் முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான, இந்த புனர்வாழ்வுப் பயிற்சித் திட்டமானது பயனுள்ளது. முக்கியமானது என்பது நிரூபணமாகியுள்ளது' என தெரிவித்தார்.

0 comments:
Post a Comment