அஸ்ஹர்-நிந்தவூர் பிரதேச சபையினால் உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு இன்று நடமாடும் சேவை ஒன்று இடம் பெற்றது. இந்நடமாடும் சேவைக்கு பொது மக்கள் பலரும் வந்து தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார்அலி, ஏ.எம்.றியாஸ், கலந்தர் (றாசீக்), வை.எல்.சுலைமாலெவ்வை உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்கள்.
பாடசாலை மாணவர்களுக்கு பொது நூலகத்திற்கான இலவச அனுமதி அட்டை வழங்கப்பட்டது. அத்தோடு, மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

0 comments:
Post a Comment