எஸ்.றிபான் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், தவிசாளரும் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாடகம் ஆடுகின்றார்களா என்று மக்கள் சந்தேகித்துக் கொள்ளும் படியாகவே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள இந்த இரண்டு பேரும் தேர்தல் காலங்களில் எதிரும் புதிருமாக செயற்படுவதும் பின்னர் தேர்தல் முடிந்ததும் ஒன்றாக மேடைகளில் தோன்றுவதும் முஸ்லிம்களுக்கு பழக்கப்பட்டதாக இருக்கின்றது.
வடமாகாணம், வடமத்தி, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடல் வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் பிடிவாதமாக இருந்தார். இதே வேளை, கட்சியின் தவிசாளராகவுள்ள பசீர் சேகுதாவூத் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டுமென்பதில் பிடிவாதம் காட்டினார்.
இந்த இழுபறிக்குள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து அணி அமைத்துச் செயற்படத் தொடங்கினார்கள். கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் மாகாண சபைத் தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பதில் பலத்த விவாதங்களும் இடம் பெற்றன.
இந்நிலையில் ரவூப் ஹக்கிம் தனித்துத்தான் தேர்தலில் போட்டியிடுவதென்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருக்குமிடையே பலத்த கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. தங்களது முரண்பாடுகளை ஊடகங்களிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் வெளிப்டுத்தினார்கள். இதனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றுமொரு பிளவை அடைந்து விடுமோ என்று கட்சியின் ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள்.
மாகாண சபைத் தேர்தலில் கட்சியின் பிரமுகர்களுக்கு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் படி பசீர் சேகுதாவூத்திற்கு புத்தளம் மாவட்டத்தின் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவர் அந்த பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக பேச முடியாது. கட்சிக்காக பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டுத்தான் அதனை தம்மால் செய்ய முடியுமென்ற கருத்தை பசீர் சேகுதாவூத் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மட்டுமல்லாது, கட்சி பிழையான முடிவினை எடுத்துள்ளது. கட்சியின் வியூகம் மாகாண சபைத் தேர்தலில் பிழைக்குமென்ற எதிர்வு கூறலையும் பசீர் சேகுதாவூத் தெரிவித்துக் கொண்டார்.
பசீர் சேகுதாவூத்தின் கருத்துக்களையிட்டு ஆத்திரப்பட்டுக் கொண்டவரைப் போல் ரவூப் ஹக்கிம் கட்சியின் தவிசாளர் அரசாங்கத்தின் ஊது குழலாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று தேர்தல் மேடை ஒன்றில் தெரிவித்தார்.
இப்படியாக ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு கோழிச் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டார்கள். இவர்களின் சண்டை நிச்சமாக கட்சியை உடைத்துவிடுமென்ற எண்ணத்தை கட்சியின் ஆதரவாளர்களிடையே வலுவடையச் செய்தன.
இதே வேளை, கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜப்தீன் பசீர் சேகுதாவூத்தின் கருத்துக்கள் கட்சியை பாதிக்கச் செய்வதாக இருக்கின்றது. ஆதலால், அவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க உள்ளதென்று தெரிவித்து இருந்தார்.
எனக்கு எதிராக கதைப்பதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும் கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும்தான் அதிகாரம் இருக்கின்றது. வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்தார். சபீக் ரஜப்தீனின் கருத்துக்களுக்கு எதிராக சூடான கருத்துக்களை பசீர் சேகுதாவூத் முன் வைத்தார்.
இதனை தொடர்ந்து சபீக் ரஜப்தீன் தான் அப்படி கருத்துக்களை ஊடகங்களுக்கு கூறவில்லை என்று பல்டி அடித்தார்.
இவ்வாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கருத்து முரண்பாடுகள் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கின்ற நிலையில் அக்குறனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பசீர் சேகுதாவூத் உரையாற்றும் போது, ரவூப் ஹக்கிம் சிறந்த தலைவர் என்று அவரை புகழ்ந்துள்ளார். அறிஞர் சித்திலெப்பையையும் தொடர்பு படுத்தி தமது கருத்தை சொல்லியுள்ளார்.
தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதாக இருந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வேன் என்று உறுதியாக சொன்ன பசீர் சேகுதாவூத்தினால் அந்த முடிவில் உறுதியாக இருக்க இயலவில்லை. அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யாமலேயே மேடையில் ஏறி கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
கட்சி வகுத்த வியூகம் பிழைக்குமென்று கருத்தை வெளியிட்டு விட்டு கட்சியின் வெற்றிக்காக உழைப்பது முரண்பட்ட தன்மையின் உச்சமாகவே இருக்கின்றது. கட்சியின் வியூகம் பிழைக்குமென்று தவிசாளரே சொல்லும் போது, கட்சிக்கு எப்படி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இப்பாரிய கருத்தையிட்டு ரவூப் ஹக்கிம் இதுவரை கருத்துக்களை வெளியிடவில்லை. மாறாக தவிசாளர் அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கின்றார் என்று ஒரு வரியில் கருத்தை சுருக்கிக் கொண்டார்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் இது போன்றதொரு நிலையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் எம்மால் அவதானிக்க முடிந்தது. பசீர் சேகுதாவூத் அரசாங்கத்துடன் கட்சி இணைந்து போட்டியிட வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டார். ஆனால், தனித்து போட்டியிடுவதற்கு ரவூப் ஹக்கிம் முடிவு செய்த போது தலைமையிடம் அறிவிக்காமலேயே தமது பிரதி அமைச்சர் பதவி துறந்தார். இதனால், ரவூப் ஹக்கிம் தமது அமைச்சர் பதவியை இihஜினாமாச் செய்ய வேண்டுமென்று கருத்து பரவலாக ஏற்பட்டன.
இதனை அடுத்து இவர்கள் இருவரும் இப்போது கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதனைப் போன்று அன்றும் சொல்லிக் கொண்டார்கள்.
ஆதலால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஒன்று வந்தால் தமது குறைகளை மறைத்துக் கொள்வதற்காகவும், மக்களின் எண்ணங்களை மாற்றுவதற்காகவும் தங்களுக்குள் பிரச்சினைப்பட்டுக் கொள்வதனைப் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனறதொரு பதிவை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன.
ரவூப் ஹக்கிமும், பசீர் சேகுதாவூத்தும் தங்களுக்குள் மக்களுக்கு எப்படி கருத்துக்களை முன் வைக்க வேண்டுமென்று ஒரு திட்டமிடலைச் செய்து கொண்டுதான் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்றுதான் முடிவு செய்யும் நிலையில் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு எந்ததொரு திட்டமிடலையும் செய்யவில்லை என்று கருதிக் கொண்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் காண்படுகின்றன என்றுதான் கருத வேண்டியுள்ளது. கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகளை குறைத்துக் கொள்ளாது வெற்றியைப் பற்றி சிந்திக்க முடியாது.

0 comments:
Post a Comment