• Latest News

    September 17, 2013

    தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முஸ்லிம்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது

    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPJuQjYh3bhJdYceJ3ySUWp3NF8BKlsV2vYwvf8V3zpzwN1ZJKHZKLUhaQtw_-2HxaXGc5Stw2hnLCI38PiCKpIdtI8qVoQ_F5YMUIb1FJeTBr7ZLRJcPfJxYBWHVXriC1-St9ezXTkJk4/s1600/130201104207_sri_lanka_muslim_protest_housing_scheme_vavuniya_304x171_bbc_nocredit.jpgஇந்தத் தேர்தலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி களத்தில் இறங்கியிருக்கின்றது. அதேநேரம் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது.
    வடமாகாண சபை என்பது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். இதற்குப் போதிய அதிகாரங்களில்லை.தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு இது தீர்வாகமாட்டாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
    பிளவுபட்டுள்ள முஸ்லிம்கள்எனினும், இந்தத் தேர்தல் மூலம் வடமாகாண சபையின் ஆட்சியதிகாரத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் கைப்பற்ற வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது.
    அதேநேரம் மாகாண சபைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதிகாரரங்களைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற தலைமை வேட்பாளர் சின்னத்துரை தவராஜா கூறுகின்றார்.
    முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஒரு சாரார் ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்கள்.
    வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதன் மூலம், மாகாணசபையின் அதிகாரங்கள் உட்பட்ட தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
    அதேநேரம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற ஈபிடிபி கட்சியின் வெற்றியிலேயே, தமது எதிர்காலம் தங்கியிருக்கின்றது என்றும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாணசபையைக் கைப்பற்றினாலும்கூட, தமக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று அரச தரப்பினரை ஆதரிக்கின்ற முஸ்லிம்கள் கூறுகின்றனர். BBC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முஸ்லிம்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top