• Latest News

    September 17, 2013

    இலங்கை ஆசியாவின் போதைப் பொருள் ஆச்சரியமாக உருவாகும்- ரணில்

    http://www.lakpuvath.lk/english/media/k2/items/cache/3946cc5a2ed843c2c9fca0b4efcd28ba_XL.jpg
    இலங்கை போதைப் பொருள் இராச்சியமாக மாற்றமடைந்துள்ளது. விரைவில் ஆசியாவின் போதைப் பொருள் ஆச்சரியமாக உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
    கண்டி யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    ஆரம்பத்தில் சிறு பொதிகளில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் தற்போது கொள்கலன்களில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    அதிகளவான ஹெரோயின் இலங்கையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலின் ஊடாக அந்த மாற்றத்தை ஆரம்பிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை ஆசியாவின் போதைப் பொருள் ஆச்சரியமாக உருவாகும்- ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top