இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அமைக்கப்பட்ட நாடாளுமன்ற
தெரிவுக்குழுவில் அரதரப்பில் அங்கம் வகித்த கட்சியான ஜாதிக்க ஹெலஉறுமய
இன்று (09) விலகியுள்ளது.
அந்த தெரிவுக்குழு இன்று கூடிய வேளையில் விடேச உரையொன்றை நிகழ்த்திய
அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க,
தாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
செப்டெம்பர் 21க்கு முன்னர், அப்படியென்றால் வடமாகாண சபைத் தேர்தல்
இடம்பெறுவதற்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான இடைக்கால
அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அனுகூலமான
பிரதிபலிப்பு காட்டப்படாததன் காரணமாகவே தமது கட்சி இந்த குழுவில் இருந்து
விலகுவதற்கு பிரதான காரணமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க, தெரிவுக்குழுவில் உரிய நடைமுறையொன்று இல்லாததன் காரணமாக
தமது கட்சி அதிலிருந்து விலகத் தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தெரிவுக்குழுவிலிருந்து எவ்வித பலனும் இல்லையெனவும், இந்த
தெரிவுக்குழுவானது பிரச்சினையை பின்தள்ளிப்போட்டு காலத்தை வீணடிப்பதைத்
தவிர வேறு ஒன்றும் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment