• Latest News

    October 14, 2013

    மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வு

    அகமட் எஸ். முகைடீன்
    உலக ஆசிரியர் தின நிகழ்வு சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று (14.10.2013) வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் அதிபர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். இம்தியாஸ் மதனி தலைமையில் நடைபெற்றது.
    இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் யூ.எல்.எம்.ஹாசீம், விஷேட அதிதியாக அரம்கோ பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ரீ.ஏ.றஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்
    இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அழைக்கப்பட்டிருந்த போதிலும் கொழும்பில் முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்றைய தினம் இருந்தமையினால் ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம் நேரடி கானொலி காட்சியாக தனது இதய பூர்வ வாழ்துரையினை நிகழ்த்தினார்.
    இதன்போது வரவேற்பு பாடல், ஆசிரியர் தின கீதம் என்பன ஆசிரியர்களினால் நிகழ்த்தப்பட்டன. அத்தோடு சவாலுக்கு சவால் ஆசிரியர் நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்திற்கு ஏற்பதாக ஆசிரியர்கள் தமது நடிப்புத் திறமையினை வெளிப்படுத்தினர்.
    நிகழ்வின் ஆரம்பத்தில் இப்பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றி மரணித்தவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காக ஒரு நிமிட மௌனம் சாதிக்கப்பட்டது.
    மாணவர்களின் அறிவினை துலங்கச் செய்கின்ற மகோன்னதமான ஆசிரிய சேவையினை பாராட்டும் வகையில் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top