சீ.வீ. விக்னேஷ்வரன், வட மாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்த போதும், அவர்கள் யாப்புக்கு
எதிராகச் செயற்பட்டால் அதற்கு எதிராக அரசாக நின்று நடவடிக்கை எடுக்கப்படும்
என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் ஜனாதிபதியின் முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது நற்செய்தியென்றும், அரச வேலைத் திட்டங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் அவர்கள் செயற்பட்டால், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தவர் என்றும் பாராமல் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment