• Latest News

    October 07, 2013

    கிழக்கிற்கு காணி அதிகாரம் தரவே வேண்டும்! மு.கா

    இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நிருவாகம் நடைபெறு கின்ற மாகாண நிருவாக அமைப்புக்களில் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு பல ஆண்டுகளாகவுள்ள காணிப் பிரச் சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு கட்டாயப் படுத்தி பிரேரணை ஒன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு கட்சியின் உயர்மட்டக் குழு முடிவுசெய்துள்ளது.

    கிழக்கு முஸ்லிம்கள் பல்லாண்டு காலமாக காணிப் பிரச்சினை காரணமாக பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர் எனவும், அரசாங்கம் அதுவிடயத்தில் பாராமுகமாக இருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண நிருவாக சபைகளிடம் இவ்விடயத்தைச் சமர்ப்பிக்க முனைந்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி குறிப்பிட்டுள்ளார்.

    கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிருவாக அதிகாரம் மிக்க இரண்டு நகர சபைகளும், மாகாண சபைகள் ஐந்தும் இருப்பதனால் அவற்றின் தலைவர்களுக்கு இதுதொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கிற்கு காணி அதிகாரம் தரவே வேண்டும்! மு.கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top