இந்திய அணியின் சாதனை சிகரமும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான சச்சின்
தெண்டுல்கர் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் லீக் தான்,
தனது கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார். இதன்படி நேற்று நடந்த
இறுதிப்போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக
விடைபெற்றார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று
கைதட்டியும், கரவொலி எழுப்பியும் பிரியா விடை கொடுத்ததுடன்இ மும்பை
வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர். 40
வயதான தெண்டுல்கர் இந்த தொடரில் மொத்தம் 70 ரன்கள் (15, 5, 0, 35, 15 ரன்)
மட்டுமே எடுத்தார்.இதே போல் மற்றொரு ஜாம்பவான் 40 வயதான ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கும் இது தான் கடைசி 20 ஓவர் தொடராகும். அவர் இந்த தொடரில் வெறும் 48 ரன்கள் மட்டுமே (1, 31, 0, 10, 5, 1) எடுத்தார். என்றாலும் அவரது கேப்டன்ஷிப் பாராட்டும்படி இருந்தது. இனி இவ்விருவரையும் வண்ணமயமான உடையுடன் களத்தில் பார்க்க முடியாது.
0 comments:
Post a Comment