செனல் 4 தொலைக்காட்சியின் ஊடவியலாளர் கல்லம் மெக்ரே இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலை யத்தை வந்தடைந்தார். இவருடைய வருகையை எதிர்த்து கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் கொலைக் களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றம், யுத்த சூனிய வலயம் உள்ளிட்ட இலங்கை தொடர்பான ஆவணப் படங்களை கல்லம் மெக்ரே தயாரித்தமை குறிப்பிடத் தக்கது.
தேசிய ஒன்றுமைக்கான இயக்கமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள், செனல்-4 ஊடகவியலாளர்களின் வருகையை எதிர்க்கும் சுலோகம் தாங்கிய அட்டைகளை தாங்கியிருந்ததுடன் செனல்-4 புலிகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்த தவறியுள்ளதாகவும் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.தேசிய ஒன்றுமைக்கான இயக்கமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
செனல்-4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்களுடைய கோஷங்களை எழுப்பினர்.
இதேவேளை கலம் மக்ரேக்கு வீசா வழங்குவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் கிடையாது எனவும் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிடுவதன் மூலம், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும் எனவும், எவ்வாறெனினும் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரிக்க செனல்4 ஊடகம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment