மும்பையில்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் , தனது இறுதி
டெஸ்ட் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின்
டெண்டுல்கர், 74 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாதனைகள் பல படைத்த அவரது கிரிக்கெட் வாழ்வில், இதுவே ஒருக்கால் அவரது இறுதி இன்னிங்ஸாகவும் அமையலாம்.
நேற்று
இந்திய இன்னிங்ஸில் 38 ஓட்டங்களெடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சச்சின்,
இன்று மீண்டும் ஆட்டத்தை தொடங்கி நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார்.
ஆனால் அவர் தனது சொந்த களமான மும்பை கிரிக்கெட்
மைதானத்தில் அவரது 101வது சதமடித்து விடைபெறுவார் என்ற ரசிகர்களின்
எதிர்பார்ப்புக்கிடையே,
74 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்,சுழற்பந்து
வீச்சாளர் டியோனரைன் வீசிய ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே வந்த பந்தை அடிக்க
முயன்று, சேம்மியிடம் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் அவுட்டானது, அரங்கில் குழுமியிருந்த அவரது ரசிகர்களிடையே பிரமிப்புடன் கூடிய அமைதி நிலவியது.
இந்த இன்னிங்ஸுடன், சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த ஓட்டங்கள் 15,921 என்ற நிலையில் இருக்கிறது.
இந்தியா இந்த ஆட்டத்தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன் நிற்கிறது.

0 comments:
Post a Comment