எஸ்.அஷ்ரப்கான்;
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டமையை முஸ்லிம் மக்கள் கட்சி வண்மையாக கண்டித்திருப்பதுடன் கொள்ளையர்கள் பற்றி நீதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது, அண்மைக்காலமாக நிந்தவூரில் பல மர்ம கொள்ளசை;சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், அவற்றின் பின்னால் உள்ளோர் என சந்தேகிக்கப்படுபவர்களை பொது மக்கள் மடக்கிப் பிடித்து அவர்களை பொலிசில் ஒப்படைப்பதற்கு முன் அதிரடியாக அவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது விடயத்தில் பொது மக்களுக்கும் படையினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்ட போது சமரசம் செய்து வைக்க முயன்ற பிரதேச சபை தவிசாளரும் தாக்கப்பட்டுள்ளார்.குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிந்தவூர் மக்களின் கோரிக்கை நியாயமானது. ஒரு ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்கள் இதற்கு கட்டாயம் செவி மடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக தென்னிலங்கையில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளது. இது போல் கிழக்கிலும் அரங்கேறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருக்கும் நிலையில் நிந்தவூர் மக்களில் 80 வீதமானோர் அவரது கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலையில் இன்று நிந்தவூர் மக்களுக்கு நீதி கிடைக்காமலிருப்பது கவலைக்குரியதாகும்.
ஆகவே இது விடயத்தில் நீதியான விசாரணைகள் நடைபெறுவதோடு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நீதியை நிலைநாட்ட முன் வர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

0 comments:
Post a Comment