• Latest News

    November 10, 2013

    கல்முனை டெலிக்கொம்மின் கவனத்திற்கு!

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    மருதமுனை தபால் நிலையத்திற்குச் செல்லும் வீதியின் நடுவே  தொலைத் தொடர்புக் கம்பம் ஒன்று உள்ளதால் இந்த வீதியால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    இது தொடர்பாக கல்முனை டெலிக்கொம் நிறுவனத்திற்கு பல முறை அறிவித்த போதிலும் இதைச் சீர்செய்ய டெலிக்கொம் நிறுவனம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மருதமுனை தபால் நிலையப் பொறுப்பதிகாரி பீ.எம்.அஸ்ஹர்தீன் தெரிவித்தார்.
    இந்த வீதித்தடை காரணமாக தபால் பொதிகளை ஏற்ற வரும் வாகனமும்; மற்றும் தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய வாகனங்களும் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றன.
    ஆகவே இந்த விடயம் தொடர்பாக கல்முனை டெலிகொம் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீதியின் நடுவே உள்ள தொலைத் தொடர்புக் கம்பத்தை அகற்றி வாகனங்கள் செல்வதற்கு வசதியை ஏற்படுத்துமாறு தபால் நிலையப் பொறுப்பதிகாரியும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை டெலிக்கொம்மின் கவனத்திற்கு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top