• Latest News

    December 14, 2013

    ரஜனிக்கு 10 ரூபா பிச்சை போட்ட பெண்- உண்மை சம்பவம்

    கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் செல்வத்தையும் சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிச்சைக்காரர் என நினைத்த பெண்ணொருவர் அவருக்கு 10 ரூபா 'பிச்சை' கொடுத்த சம்பவமொன்று நடந்தது என்றால் பலருக்கும் நம்ப முடியாமல்தான் இருக்கும்.
     
    ஆனால் சில வருடங்களுக்குமுன் இமாலயப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் ரஜினிகாந்த் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது இவ்வாறான சம்பவம் இச்சம்பவம் நடந்ததாம்.

    ஆலயத்திற்குள் சுமார் 40 வயதான பெண்ணொருவர் ரஜினி காந்தை கடந்து செல்லும்போது அவரின் எளிமையான தோற்றத்தை பார்த்த பெண் அவரை பிச்சைக்காரர் என கருதிவிட்டார். அப்பெண்ணுக்கு ரஜினி பற்றி தெரிந்திருக்கவில்லை.
     
    அவர் அனுதாபம் காரணமாக 10 ரூபாவொன்றை ரஜினிக்கு கொடுத்தார் என இச்சம்பவத்தை நேரில் அவதானித்த மற்றொhரு பெண்ணொருவர் நினைவுகூர்ந்துள்ளார்.
     
    வேறு யாருக்கும் பிச்சைக்காரர் போல் நடத்தப்பட்டால் பெரும் களேபரம் நடந்திருக்கும். ஆனால் எளிமைக்கு பெயர் போன ரஜினி ஒன்றும் பேசாமல் புன்னகையுடன் அந்த 10 ரூபாவை வாங்கிக் கொண்டாராம்.

     ரஜினிகாந்த் ஆலயத்திலிருந்து வெளியேறி காரை நோக்கி செல்லும்போதுதான் 'பிச்சை' போட்ட பெண்ணுக்கு தான் செய்தது தவறு என்பது புரிந்திருக்கிறது. உடனே அவரின் பின்னால் ஓடிச் சென்று அவரை பிச்சைக்காரர் என எண்ணியமைக்கு மன்னிப்பு கோரினார் அப்பெண்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரஜனிக்கு 10 ரூபா பிச்சை போட்ட பெண்- உண்மை சம்பவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top