இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்றம் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அமைதி மறுசீரமைப்பு விடயங்களை பாராட்டியுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், முதல் முறையாக நடத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலை வரவேற்றுள்ளனர்.
அத்துடன் மோதல் நடைபெற்ற பகுதிகளின் கணிசமான இராணுவ பிரசன்னம் உள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருப்பது கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.அமைதி மறுசீரமைப்பு விடயங்களை பாராட்டியுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், முதல் முறையாக நடத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலை வரவேற்றுள்ளனர்.
அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். காணி பிரச்சினைகளை தீர்க்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த யோசனையில் கோரப்பட்டுள்ளது.
நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை வேண்டும் என இந்த வார ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று வலியுறுத்தியிருந்தது.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று கோரும் ஐரோப்பிய ஒன்றின் தீர்மானத்தை கண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, எந்த பரிந்துரைகளை எப்பொழுது அமுல்படுத்துவது என்பதை அரசாங்கம் முடிவு செய்யும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாருக்காகவும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தப்படவில்லை. எமது சொந்த பிரச்சினைகளுக்காகவும் சொந்த மக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. அதனை நாங்கள் பார்த்து கொள்வோம் என்றார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையான அமுல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றம் நேற்று நிறைவேற்றியது.
0 comments:
Post a Comment