• Latest News

    December 13, 2013

    புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் 18ஆம் திகதி வெளியிடப்படும் !

    நாட்டிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்கள் அனுமதி பெறுவதற்கான புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் விபரம் எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
     
    கடந்த பரீட்சையில் மூன்று லட்சத்து 29,725 பரீட்சார்த்திகள் தோற்றினர். இதில் சிங்கள மொழி மூலம் இரண்டு லட்சத்து 49,396 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 80,329 பரீட்சார்த்திகளும் தோற்றியுள்ளனர்.
    தேசிய ரீதியில் 2836 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார் .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் 18ஆம் திகதி வெளியிடப்படும் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top