அகமட் எஸ். முகைடீன்;
ஆயுர்வேத யூனானி மற்றும் சித்த வைத்தியர்களுக்கான நியமனங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புதன்கிழமை (2014.01.01) சுதேச வைத்திய அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.
ஆயுர்வேத யூனானி மற்றும் சித்த வைத்தியர்களுக்கான நியமனங்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புதன்கிழமை (2014.01.01) சுதேச வைத்திய அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.
மேற்படி வைத்திய பட்டப்படிப்பை 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு 2014.01.01 ஆந் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. ஆயுள்வேத வைத்தியர்களாக 128பேரும் யூனானி
வைத்தியர்களாக 37பேரும் சித்த வைத்தியர்களாக 18 பேரும் நியமனங்களை பெறவுள்ளனர். பெருந்தொகையானவர்களுக்கு இத்துறையில் நியமனங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் நியமனத்திகதியிலிருந்து ஒரு மாத கால சேவை ஆரம்ப பயிற்சி நாவின்ன சுதேச வைத்தியசாலையில் வழங்கப்பட்டு பின்னர் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment