• Latest News

    December 12, 2013

    மனைவியை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதம்

    பி.எம்.எம்.ஏ.காதர்
     வெளிநாட்டில் பணிப்பெண்ணாக சென்றுள்ள தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் இன்று வியாழ்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

    திருகோணமலை, புல்மோட்டை அரபாத் நகர் -01 ஐச் சேர்ந்த  அபூபக்கர்- முகமட் ரபீக் என்பவரே  ,பாத்திமா முபிசா (வயது-10)  தரம்-5  முகம்மது வசீம் (வயது-8) தரம்- 4,  முகம்மது ரொசான் (வயது-3 ) ஆகிய தனது மூன்று பிள்ளைகளுடன் உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
    வெளி நாட்டுக்கு சென்றிருந்த தான் 2013.09.04 ஆம் திகதியன்று நாட்டுக்கு திரும்யபோது மனைவி வீட்டில் இருக்கவில்லை. அலியார் மைமூனாஸ் என்ற பெயரை கொண்ட தனது மனைவியை அலியார் அஸீமா என பெயரை மாற்றி போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி 2013.06.13 ஆம் திகதி வெளி நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தனது மனைவியை உள்ளூரிலுள்ள முகவர் ஒருவரே  கொழும்புக்கு அழைத்துசென்று போலியான ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    தனது மனைவி 1970.10.05 ஆம் திகதியன்றே பிறந்திருக்கின்றார். எனினும் 857414915 V என்ற இலக்கத்திலேயே அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையும் போலியானது. எனது மனைவியுடைய பிறந்த திகதி உள்ளிட்ட  ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பில் கொழும்பிலுள்ள பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றபோதிலும்  பல நிலையங்களில் பொலிஸார் தன்னுடைய முறைப்பாட்டை பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாட்டை எடுத்த போதிலும் எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க வில்லை யென்றும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையிலேயே தனது மனைவியை உடனடியாக மீட்டுத்தருமாறு உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் உரிய தரப்பினரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மனைவியை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top