• Latest News

    December 13, 2013

    பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் முல்லா அவர்கள் தூக்கலிட்டுப் படுகொலை

    வடக்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் என்று ஒரே நாடாக இருந்த பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் உந்துதலின் பேரில் (1971 இல்) பிரிவினை கேட்டவர்களுக்கு எதிராக செற்பட்ட முன்னால் ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் அப்துல் காதிர் முல்லா முஜீபுர் ரகுமானின் மகள் ஹசீனாவின் (ஆட்சியில்) நீதித்துறையால் நேற்று மாலை தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
    இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது.

    முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன.

    'அவரது மரண தண்டனையை தடுக்க சட்ட ரீதியில் எந்த தடங்கலும் இல்லை' என்று சட்டமா அதிபர் மஹ்பூபி அலாம் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். 'முல்லா அனைத்து வகையிலும் மேன்முறையீடு செய்து களைப்படைந்திருக்கிறார்.

    ஜனாதிபதியிடம் கருணை கோர அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என்று அலாம் விபரித்தார்.

    முல்லா மீதான வழக்கையொட்டி இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது கட்சியில் சிரேஷ்ட தலைவர்கள் பலரையும் சிறைக்கு அனுப்பி அரசு பழைய விரோதத்திற்கு பழி தீர்ப்பதாக அந்த கட்சி குற்றம்சாட்டுகிறது.

    ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் முல்லா அவர்கள் பொதுமக்களையும் புத்தி ஜீவிகளையும் கொன்றதாகவும்,  பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் ஜமாதே இஸ்லாமி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டமை என்ற குற்றச் சாட்டிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் முல்லா அவர்கள் தூக்கலிட்டுப் படுகொலை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top