முபித் ;
தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் மா பக்கட் ஒன்றைக் கூட முழுமையாக
பணங்கொடுத்து வாங்கமுடியாது நாளுக்கு நாள் கரண்டிக் கணக்கில் வாங்கி
ஊட்டவேண்டிய துயரமான நிலைமையை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு, மூதூர் எம்என்யூ ஹோட்டலில் டாக்டர் கே.எம்.ஸாஹிர் தலைமையில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஒன்று கூடலின்போது
செயற்குழு உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல்றஹுமான் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கனிசமான சம்பளவேற்றம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் சம்பளவேற்றத்தினால் எவ்வித நன்மையும் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
ஆனால், அரசியல் வாதிகள் மக்களது எத்தகைய துயரத்தையும் கவனத்திற் கொள்ளாது ஆடம்பரமான சுகபோகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமான ஒருவராக அரசியலுக்குள் நுழைந்தவர்கள்கூட பெரும் கம்பனிகளுக்கும் பங்களாக்களுக்கும் சொந்கக் காரர்களாக உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களிலிருந்து இது எவ்வாறு சாத்தியப்படும்?
எனவேதான் இலங்கை மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. இத்தேவையை உணர்ந்தே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டுவருகின்றது.
இவ்வொன்று கூடலில் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், நீதிக்கும் சுதந்திரத்துக்குமான கட்சியின் தலைவர் நஜா முஹமத் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பிர்தௌஸ் நளிமி, ஆகியோரும் உரையாற்றினர்.
0 comments:
Post a Comment