நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிபவர் தேவயானி கோப்ரகடே. அவர் தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு விசா கேட்டு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார். அதில் தவறான தகவல்களையும், முறைகேடான ஆவணங்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் நகரின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து தனது மகளை பள்ளியில் விட்டுச்செல்ல துணை தூதர் தேவயானி காரில் வந்தபோது பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தனர்.அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலுக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் சம்மன் அனுப்பியுள்ளார்.
'அமெரிக்காவின் நடவடிக்கையால் நாங்கள் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளோம். தூதரை கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா எவ்வாறு அமெரிக்காவுக்கு வளைந்து கொடுத்தாலும் கழுகு தனது வேலையை சரியாக செய்யும் என்பதை குறித்த சம்பவம் உணர்த்துகின்றது.
0 comments:
Post a Comment