தெவனகலையில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் படவேண்டும் என்ற நோக்குடன் இயங்குவதாக தெரிவிக்கப் படும் 'தெவனகலையை பாதுகாக்கும் பொது வேலைத்திட்டம்' எனும் கருத்தை குறிக்கும் பெயரில் இயங்கி வந்த அமைப்பு தெவனகலை விவகாரத்தை பொது பல சேனா கையாளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப் படும் நிலையில் குறித்த விவகாரத்தை பொது பல சேனா அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதாக அறிவிக்கும் தற்பொழுது சுவரொட்டிகளை தெவனகல மற்றும் மாவனல்லை பிரதேசங்களில் ஒட்டப்படுள்ளன.
அதேவேளை விரைவில் நாங்கள் கேகாலை, மாவனல்லையிற்கு வருவோம். சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினதும், பிரதி அமைச்சர் ஒருவரினதும் மற்றும் சிலரின் காட்சட்டைகளை தலையினால் கலட்டுவோம். இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பக்கூடாது. என பொது பல சேனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .December 14, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment