• Latest News

    December 13, 2013

    அரசாங்கத்திற்கு இருமாத காலக்கெடு! அதற்கடுத்த மாதம் அகிம்சைப் போராட்டம் முன்னெடுக்கப்படும்! ஆர். சம்பந்தன் தெரிவிப்பு

    வடக்கின் தமிழ் மண்ணிற்கு எதிராக தெற்கிலுள்ள சிங்கள அரசாங்கம் முன்னெடுத்துள்ள தமிழர் ஒழிப்பினை இரு மாதங்களுக்குள் நிறுத்தாவிட்டால் மூன்றாவது மாத்த்திலிருந்து பொதுமக்கள் ஒழுங்கு செய்யவுள்ள அகிம்சைப் போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் அரசாங்கத்தின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷியுடன் கலந்துரையாடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரண்டு மணித்தியாலங்களைத் தாண்டியிருக்கும் என உதயன் பத்திரிகை செய்திவெளியிட்டிருந்த்து.

    'வடக்கினைச் சிங்களமயமாக்கி சிங்களவர்களைக் குடியமர்த்துகின்றார்கள். இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள வலிகாம்ம் வடக்கு, பலாலி, சாம்பூர் போன்ற இடங்கள் இதுவரை அப்பாவித் தமிழ் மக்களுக்குத் திருப்பித் தரப்படவில்லை. பள்ளி மாணவர்கள் கற்க வேண்டிய பாடசாலைகள், கோவில்கள் இராணுவத்தினால் கைப்பற்றப்படுகின்றது.

    இவற்றைக் காணச் செல்கின்ற வடக்கின் முதலமைச்சருக்கு காண்பதற்கு இடமளிக்கப்படாதிருக்கின்றது.

    2014 வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீத்துக் கென்று பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கியுள்ளது அரசாங்கம். யுத்தம் முடிவுக்கு வந்து 04 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அரசாங்கம் ஏன் இவ்வளவு பணத்தை விரயம் செய்கின்றதோ?

    இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் மூன்றாம் மாத்த்திலிருந்து வடக்கிலுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து பாரியதொரு அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுப்பர்' எனவும் அவர் அவ்வூடகத்தில் தெரிவித்துள்ளார்.

    அப்பேச்சுவார்த்தையின் போது, யசூஷ அகாஷி 'வடக்கிற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கதைத்தேன்.. நீங்கள் அவசரப்பட வேண்டாம். எதிர்காலத்தில் நல்லன நடக்கும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு இருமாத காலக்கெடு! அதற்கடுத்த மாதம் அகிம்சைப் போராட்டம் முன்னெடுக்கப்படும்! ஆர். சம்பந்தன் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top