• Latest News

    December 14, 2013

    பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கம் - புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்?

    பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கொள்கலன்களை விடுவிக்க சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டே ஜயரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்த நிலையில், அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் போயா தினத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    போயா தினத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ராஜபக்ஷ அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

    ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருவது, அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.

    அத்துடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கம் - புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top