முன் அனுமதி இன்றி இன்று (14) முதல் பொது மக்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட வரலாம் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிடவோ, விவாதங்கள் நடை பெறுவதை பார்வையிடவோ இனி முன் அனுமதிபெறத் தேவையில்லை. இன்று முதல் பாராளுமன்றம் பொது மக்களுக்காக திறந்துவிடப்படுகிறது என்று சபாநாயகர் அறிவித்தார்.
நேற்று முன்தினம் பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக பேசப்பட்டபோது சகல தரப்பினரும் இதற்கு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் நேற்று தெரிவித்தார்.பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிடவோ, விவாதங்கள் நடை பெறுவதை பார்வையிடவோ இனி முன் அனுமதிபெறத் தேவையில்லை. இன்று முதல் பாராளுமன்றம் பொது மக்களுக்காக திறந்துவிடப்படுகிறது என்று சபாநாயகர் அறிவித்தார்.
நேற்றுக்காலை வரவு- செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்திற்காக பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியை விவாதங்களை பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பாராளுமன்ற நுழைவாயிலுள் உள்ள வழமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் உள்ளே செல்ல முடியும்.
இதற்கு முன்னர் பாராளுமன்ற படைக்கல சேவிதருக்கு முன் கூட்டியே அறிவித்து வருகிறவர்களின் பெயர்ப்பட்டியல் முன்கூட்டியே அனுப்பிவைக்கப்பட்டு அனுமதிபெற வேண்டும்.
இன்று முதல் அந்த நடைமுறை இல்லாமல் பொதுமக்கள் வரமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற ஜயந்திபுர நுழைவாயிலுக்கு அருகேயுள்ள வாகன தரிப்பிடத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதத்தில் பாரிய தொலைக்காட்சியொன்றும் பொருத்தப்பட்டது.
இதேபோன்று விவாதங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் அடுத்தகட்டமாக பொதுமக்களுக் காகவும் பாராளுமன்றம் திறக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment