• Latest News

    December 14, 2013

    பாகிஸ்தான் கடற்படைத் தளபதியுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சந்தித்து பேச்சு

    பாகிஸ்தான் கடற்படைத் தளபதி மொஹமட் அசீஸ் சந்தீலா நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள், பயிற்சிகள், கூட்டு நடவடிக்கைகள் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
    இந்த சந்திப்பில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ஜயநாத் கொலம்பகே, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனல் காசிம் குரேஷி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இதேவேளை, இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அத்மிரல் ஆசீப் சந்தீலா நேற்று இலங்கை விமானப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

    இலங்கை விமானப் படைத் தளபதியின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு விமானப் படையினரின் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    இதன் பின்னர் இரு நாடுகளின் தளபதிகளும் இரண்டு நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தமான பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாகிஸ்தான் கடற்படைத் தளபதியுடன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சந்தித்து பேச்சு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top