வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்ளும் வட மாகாணசபையின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்து வருவதாகவும் எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது எனவும் அச் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாணசபைகளினால் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்பத்திரிகையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment