ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்னர் சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட வேண்டியவை துரிதமாக செய்து முடிப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று 10.12.2013 முற்பகல் கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கலந்துரையாடலின் நிறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
அடுத்த வருட மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டியுள்ள விதம் மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் பற்றி ஜப்பான் நாட்டுத் தூதுவருடன் கலந்துரையாடினோம். நீதியமைச்சினால் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் கருத்து பாரிமாற்றம் செய்து கொண்டோம் என்றார்.
விஷேடமாக அடுத்த வருட மார்ச் மாதத்திற்குள் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அதேபோல புலனாய்வு விசாரணை முடிவுபெறாத வழக்குகள் துரிதமாக முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் பேசப்பட்டது எனக் கூறினார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இனங்களுக்கிடையே சகவாழ்வு மலர்ந்துகொண்டிருப்பது பற்றியும் அவதானத்தை செலுத்தினோம். இடம்பெயர்ந்தோருக்கான சட்டங்கள் மற்றும் மீள்குடியமர்த்தலில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசினோம். ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் ஜப்பானின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.
இதன் போது ஜப்பானிற்கான இலங்கைத் தூதுவர் அத்மிரால் வசந்த கரன்னாகொட உட்பட ஜப்பான் நாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

0 comments:
Post a Comment