• Latest News

    December 10, 2013

    பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்கோரி யாழில் விழிப்புனர்வுப் பேரணி

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    வடக்கு கிழக்கில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்கோரிய பெண்கள் அமைப்பினரால் 16 நாள்செயல்வாத செயற்திட்ட விழிப்புனர்வுப் பேரணி ஒன்று இன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    கண்டி வீதியில் யாழ் நீதிமன்றத்தின் முன்பாக நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் மணிக்கூட்டு வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை சென்றடைந்து அவ் வீதியில் உள்ள யாழ்ப்பாண கல்லூரியின் உயர் கல்வி நிலையத்தை சென்றடைந்தது
    இடர் முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான வலையமைப்பு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்புஆகியன இணைந்து முன்னெடுத்த இந்த பேரணியில் 200 மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்
    .
    கடந்த மாதம் நவம்பர் 25 ம் திகதி தொடக்கம் நாளை வரையிலான காலப்பகுதியில் உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத பிரச்சாரத்தில் இணைந்து கொள்ளும் முகமாகவே இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போருக்குப் பின்னராக காலத்தில் வடபகுதியில் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடச்சியாக நடைபெற்று வருகின்றது இத்தகைய சம்பங்கள் வடபகுதியில் சட்ட ஒழுங்குகள் சீரான முறையில் இன்மையே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்கோரி யாழில் விழிப்புனர்வுப் பேரணி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top