எஸ்.அஷ்ரப்கான்;
கல்முனை பிரதேசத்தை சுக்குநுாறாக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் உடன்பட மாட்டோம் என்று அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் உரத்த குரலில் சத்தமிட்டு கல்முனை முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பாக குரல் கொடுத்தனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் பொது நிருவாக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்லேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
கல்முனை பிரதேசத்தை சுக்குநுாறாக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் உடன்பட மாட்டோம் என்று அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் உரத்த குரலில் சத்தமிட்டு கல்முனை முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பாக குரல் கொடுத்தனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் பொது நிருவாக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்லேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
கல்முனை பிரதேசத்தை சுக்கு நூறாக்கும் எந்த செயலுக்கும் உடன்படமாட்டோம் என்று மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஹரீஸ் எம்.பி ஆகியோர் ஆவேசமாக குரல்கொடுத்தநிலையில் இது விடயமாக ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை முஸ்லிம் மக்களுக்கு திட்டமிட்ட அநீதி நடைபெறுகின்றது என்று உரத்த குரலில் சத்தமிட்டார். கட்டுப்படுத்த அமைச்சர்கள் முற்பட்டும் முடியாமல் போனது. இதன்போது அங்கு அமளிதுமளி ஏற்பட்டதுடன் பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கும் சென்றுள்ளது.
இதேவேளை, பிரதியமைச்சர் சரத் வீரசேகர 29 கிராம சேவகர் பிரிவு உள்ள பிரதேசத்துக்கு தனி பிரதேச செயலகம் வழங்கப் படவேண்டும் என தெரிவித்த போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் போலி வரை படத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம் பிரதேசத்தை அபகரிப்பு செய்யும் நோக்கில் செயற்படுவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேநேரம், அமைச்சர் தயாரட்ன பேச முற்பட்டபோது கல்முனையில் உள்ள மக்களை பிரிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். கல்முனை முஸ்லிம்களை சிறுமைப்படுத்த எடுக்கும் முயற்சியே இதுவாகும் என கூறி, அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இருந்தும், சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு அரசாங்க அதிபரை நாம் ஏற்றுக்கொண்டு இனவாதம் பேசாமல் வாழ்கின்றோம். கரையோர மாவட்டம் எமக்கு தரப்படவேண்டும். எங்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி நடைபெறுகின்றது என்று பலத்த சத்தமிட்ட ஹரீஸ் எம்.பி இங்கு நடைபெறுகின்ற அநீதிகளை ஏற்கமாட்டோம் என்று மேசை கதிரையை தள்ளிவிட்டு பீறிட்டு எழுந்தார். அப்போது பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவும், தயாரத்னவும் ஹரீஸ் எம்.பியை பிடித்து அமர செய்தார்கள்.
இந்த விடயமாக நான் தெளிவில்லாமல் இருந்தேன் ஹரீஸ் எம்.பி யும், அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தெளிவு படுத்திய பின்னர் தான் உண்மை நிலையை அறிந்தேன் .ஹரீஸ் எம்.பி இந்த விடயங்களை தெளிவு படுத்தாமல் இருந்திருந்தால் நான் தமிழ் பிரதேச செயலகம் தனியாக இயங்குவதற்கான அனுமதியை இன்று வழங்க இருந்தேன் என பொதுநிருவாக அமைச்சர் தெரிவித்தார். உண்மை நிலையை அறிந்த அங்கிருந்த சிங்கள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குசு குசுக்கத் தொடங்கியதும் இந்த விடயம் விஸ்வரூபம் எடுக்கப் போவதை அறிந்து இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கல்முனை தமிழ் பிரதேச உப செயலக நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை பொதுநிருவாக அமைச்சர் விசாரித்த போது, கல்முனையில் இயங்கும் உப பிரதேச செயலகத்துக்கு எந்த அநீதியும் இடம் பெறவில்லை. தமிழ் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளும், முஸ்லிம் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளும் தடை இன்றி இடம் பெறுவதாக அரசாங்க அதிபர் அங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment