• Latest News

    December 11, 2013

    இலங்கையில் முஸ்லீம் பெண் தாதியர்களின் சீருடை பொருத்தமானதா?

    உமர் அலி முகம்மது இஸ்மாயில்;
    இலங்கையின் மருத்துவத்துறையில்  தாதியர்களின் (Nurses) பங்களிப்பு மிகவும் முக்கியமான  இடத்தை  வகிக்கின்றது.

    தாதியத்துறையில்   தொண்நூற்றுக்கும்  அதிகமான   அளவினர் பெண்களாகவே இருக்கின்றனர்.அதிலும் தற்போது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில்  தற்பொழுது  கணிசமான  முஸ்லீம் தாதிகள் உள்ளனர்.

    1985 ஆம் ஆண்டிற்கு முன்னர்  முஸ்லீம் பெண்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தாதியத்துரையில் ஈடுபாடு காட்டி பயிற்சிக்கு சென்றனர்.காலப்போக்கில் முஸ்லீம் பெண்கள் தொழில் கல்வித்துறையில் ஈடுபாடு காட்டுவது  பல்வேறு சூழல் பொருளாதார காரணிகளின்  தூண்டுதலினால்   படிப்படியாக அதிகரிக்கத்துவங்கிற்று.அதன் பின்னரான காலப்பகுதியில்  கிழக்கு மாகாண முஸ்லீம் பிரதேச வைத்திய சாலைகளில் முஸ்லீம் பெண் தாதிய உத்தியோகத்தர்களது  சேவையும்  கணிசமாக அதிகரித்திட்டு.

    முஸ்லீம் பெண்களில் அநேகமானவர்கள் தாதியத்துறையில் விருப்பம் இருந்தாலும்  பயிற்சிக்கு சென்று  தத்தம் பிரதேசங்களில் சேவை செய்யுமளவிற்கு ஈடுபாடு காட்டாமைக்கு  தாதியர்களின் உடையே உடையே (Nursing Uniform) காரணம்  என்று கூறப்படுகின்றது.இந்தக்கருத்து  ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் கூட.எத்தனையோ முஸ்லீம் பெண்பிள்ளைகள்  பயிற்சிக்காலத்தில் கூனிக்குறுகி அடங்கி ஒடுங்கியே  சீருடையினை அணிந்து சென்று  வெளியாகிருக்கின்றனர் மட்டுமன்றி பல பிள்ளைகள் உடை விடையத்தால்   மனம் வெறுத்துப்போய் தாம் விரும்பிய நோயாளர் பராமரிக்கும் தாதியத்துறை பயிற்சியினை  இடையிலே கைவிட்டு விட்டும் வந்திருக்கின்றனர்.

    இஸ்லாமியப்பெண்களுக்கு வரையறை செய்யப்பட்ட உடை  இருக்கின்றபோது  தற்போது இலங்கையில் உள்ள தாதியர்களுக்கான  பொதுவான  சீருடை இஸ்லாமியப் பெண்களுக்கு  எந்தவகையிலும் பொருந்தாத ஒன்றாகவே காணப்படுகின்றது..பிறரால் தமது உடலின் பாகங்கள் நோக்கப்படக்கூடாது என்று  பெண்கள் கருதுகின்றனர்..இதற்காக  அவர்கள் தமது சீருடையில்  ஒழுக்கமான முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி  அணிந்தும் கொள்கின்றனர்.ஆனால் இந்த மாற்றம்  சட்டத்திற்கு முரணானது. முஸ்லீம் பிரதேச வைத்தியசாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தமது நிறுவனத்தலைவர்களது ஆதரவுடன் இவ்வுடைகளை அணிந்து கொள்கின்றனர்.

    கடந்த காலங்களில் புத்தளம் மாவட்டத்தில் இந்த உடைகள் பற்றிய ஒரு சலலப்பும் ஏற்பட்டிருந்தது. நாம் யாவரும் அறிந்த விடயமே.
    இஸ்லாமிய கடைமைகளுள் ஒன்றான புனித ஹஜ் கடமையை முடித்தவர்கள்  தமது இஸ்லாமியப் பழக்க வழக்ங்களை தக்கவைத்துக்கொள்வதில்  மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.ஏனெனில் ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்கள்  எந்தப்பாவமான காரியங்களிலும் ஈடுபடாது இருத்தல் அவசியமாகும்.

    அந்தவகையில் முஸ்லீம் பெண் தாதியர்களின் இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டவேண்டும்.முஸ்லீம்களுக்கென்ற தனித்துவம்  இந்தவிடயத்தில் பேணப்பட வேண்டும்..இவ்வாறு பேணப்படுமிடத்து எதிர்காலத்தில் எமது சமுதாயத்தைச்சேர்ந்த  படித்த பெண்கள் கணிசமான அளவு தொழில் வாய்ப்புப் பெற வாய்ப்புள்ளது மட்டுமன்றி  பராமரிப்புத்துரையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.தாதிய உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி இகுடும்ப  நல உத்தியோகத்தர்கள்இபரிசாரகர்கள்இசாதாரண தொழிலாளர்களது உடைகளையும் இந்த மாற்றத்தினுள் சேர்க்க வேண்டும்.

    உரிமைகளை வென்றெடுப்போம் என்று ஒருசாரார் கூவிக்கொண்டிருக்க இமுஸ்லீம்களின் காவலன் இந்த அரசு என்று மறுசாரார் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும்  இந்த வேளையில்இஅமைச்சர்களான  ரிசாத்இஅதாவுல்லாஇபௌசிஇரவூப் ஹகீம்இபசீர்சேகுதாவூத்   .மற்றும் ஹிஸ்புல்லா உட்பட ஏனைய பிரதியமைச்சர்கள்இபாராளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் இந்த பிரச்சினையை  நியாயபூர்வமானதாக அமைச்சரவைக்கு விளக்கி அமைச்சரவையின் அங்கீகாரத்தைப்பெற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.இது ஒரு உண்மையான உரிமைப்போராட்டம்!
    இஸ்லாமிய நாடுகளில்  இஸ்லாமியப்பெண் தாதியர்கள் தமது  கலாச்சாரத்தைப் பேணக்கூடிய  உடைகளையே  அணிந்து தாதியகடமைகளை  செய்கின்றனர்.நமது நாடு இஸ்லாமிய நாடு இல்லை என்றாலும் யாவருக்கும்  மத சுதந்திரம் உள்ள ஒரு நாடுதானே!
    கிழக்கு மாகாணம் முஸ்லீம்களை அதிகளவாகக் கொண்ட ஒரு மாகாணம் இங்கே உள்ள முஸ்லீம் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அதிகளவு முஸ்லீம் தாதியர்களே   சேவைசெய்கின்றனர்.
    கிழக்கு மாகாண சபை இதற்குரிய ஒரு முன்மொழிவை தமது அமர்வினில் நிறைவேற்ற முன்வர வேண்டும்இஅதனைத்தொடர்ந்து இம்முன்மொழிவு சுகாதார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
    ஏனைய அமைச்சர்கள் சுகாதார அமைச்சரோடு பேச்சுவார்த்தை நடாத்தி முறையான ஒருசீருடையாக மாற்ற அமைச்சரவையில்  அனுமதிபெற   முன்னின்று உளைக்க வேண்டும்.

    இது கட்சிசார் விடயமல்ல, சமூகத்தின், சமூகப்பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.
    கட்சி பேதங்கள், பிரதேச வாதங்கள் பாராமல் இந்தவிடயத்தில் அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் முஸ்லீம் பெண் தாதியர்களின் சீருடை பொருத்தமானதா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top