gp.vk;.vk;.V.fhjh;;;;;
சாய்ந்தமருது
லிட்டில் ரோஸ் பாலர் பாடசாலை மற்றும் மாளிகா பாலர் பாடசாலை என்பன இணைந்து
ஒழுங்கு செய்திருந்த கலை விழா இன்று (15) காலை சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா
வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது
லீடர் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.எம்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ்
குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர், சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.சம்சுதீன், சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ். பிரதி அதிபர் எம்.நசார், ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.றபீக், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சி.எம்.ஏ.முனாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பாலர் பாடசாலை சிறார்களின் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இதன்போது திறமைகளை வெளிக்காடிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், பாலர் பாடசாலைகளின்
ஆசிரியர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.






0 comments:
Post a Comment