• Latest News

    December 11, 2013

    பன்முகத்தோடு முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றியவர் மௌலவி றியாழ்- மு.காவின் பிரதி தலைவர் அப்துல் மஜீத்

    அஹமட்;
    பன்முகத்தோடு முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றிய அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் முன்னாள் செயலளார் மௌலவி றியாழின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதொன்றாகும். அவர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பங்காற்றியுள்ளார்.
    இவ்வாறு மு.காவின் மூத்த பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் முன்னாள் செயலளார் றியாழின் மரணம் குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
    ஆவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
    மௌலவி றியாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது அளப்பரிய பற்றுக் கொண்டவராக திகழ்ந்தார். அவர் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு ஒரு காரியாலயம் இல்லாதிருந்த காலத்தில் ஒரு நடமாடும் செயலாளாராக இருந்து முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார். இக்காலங்களில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு காரியலாயம் ஒன்று அவசியம் என உணர்ந்து றாபியத்துல் ஆலமுல் இஸ்லாமியாவுடன் இணைந்து காரியாலயமொன்றினைப் பெற்றுக் கொடுத்தார்.
    கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் ஆசிரியராக, கல்வி அதிகாரியாக, பாடவிதானப் தயாரிப்பின் உறுப்பினராகவும் இருந்து செயற்பட்டுள்ளார்.
    மேலும், இலங்கை ஜமாத்தே இஸ்லாமியாவின் ஆரம்ப கால உறுப்பினராகவும் இருந்து அதன் வளர்ச்சிக்கும் உழைத்துள்ளார்.
    முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி அவசியம் என்ற உணரப்பட்ட போது, அதனை ஆதரித்து தலைவர் அஸ்ரப்புக்கு ஆக்கமும், ஊக்கமுமளித்து மு.காவினை கட்டி எழுப்புவதற்கு பாடுபட்டார். தலைவர் அஸ்ரப்புக்கு ஆலோசனை வழங்குகின்றவராகவும் அவர் இருந்துள்ளார்.
    இவ்வாறு ஒரு மதத் தலைவராக இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் எல்லா வகையான முன்னேற்றத்திற்கும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்ட மௌலவி றியாழின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதொன்றாகும். அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிhதௌஸை வழங்க வேண்டுமென்று பிராத்திக்கின்றேன். அத்தோடு, அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பன்முகத்தோடு முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றியவர் மௌலவி றியாழ்- மு.காவின் பிரதி தலைவர் அப்துல் மஜீத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top