• Latest News

    December 11, 2013

    மண்டேலா நினைவு கூட்டத்தில் ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்

    ஜொஹன்னஸ்பர்க்:
    மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் செல்போனில் ஜாலியாக போட்டோ எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு கூட்டம் ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள எப்.என்.பி.

    அரங்கில் நேற்று நடந்தது. அரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள், தென்னாப்பிரிக்க மக்கள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டமாக இருந்தது. இந்நிலையில் அரங்கில் நடந்த ஒரு விஷயம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

    ஒபாமா
    கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாஇ டென்மார்க் பிரதமர் ஹெல்லி தார்னிங் ஸ்மிட்இ இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் ஆகியோருடன் அமர்ந்திருந்தார். ஒபாமா ஸ்மிட் மற்றும் மிஷலுக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.
    மண்டேலா மறைவு குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் மேடையில் உருக்கமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒபாமாஇ ஸ்மிட் மற்றும் கேமரூன் செல்போனில் தங்களை தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டனர்.

    ஸ்மிட்;
    மண்டேலா மறைவு குறித்து பலர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் ஒபாமா ஸ்மிட்டுடன் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அருகில் உம்மென்று இருக்கும் மிஷலை பார்க்கையில் ஒபாமாவின் சேஷ்டை அவருக்கு பிடிக்கவில்லை என்றே தெரிகிறது.
    கண்டனம்;
    ஒரு பெரிய தலைவரின் நினைவு கூட்டத்திற்கு சென்ற இடத்தில் ஜாலியாக போட்டோ எடுத்துக் கொண்டு பெண் தலைவருடன் சிரித்து பேசிய ஒபாமாவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பெண் பிரதமருடன் ஒட்டிக்கொண்டு படம் பிடித்த ஒபாமா – விமர்சிக்கும் பத்திரிகைகள்

    நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்வின்போது, டென்மார்க் நாட்டுப் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில், சோகமான சூழ்நிலையில், அப்படியாக மூவரும் ஒட்டிக்கொண்டு தமது கைபேசியிலேயே படம்பிடித்துக்கொண்டது, பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன.

    பெண்ணான டென்மார்க் பிரதமருடன் ஒபாமாவும், கேமரெனும் ஒட்டிக்கொண்டு படம் பிடிப்பதை, ஒமாபாவின் மனைவியான மிஷேல் ஒபாமா கோபத்துடன் பார்ப்பது போன்ற பாவனையில் ஒரு படத்தை வெளியிட்ட சில பத்திரிகைகள் அதிபர் ஒபாமா தனது மனைவியிடம் வாங்கிக்கட்டப் போகிறார் என்று கேலி செய்திருந்தன.

    இன்னுமொரு பத்திரிகையோ ஒபாமாவின் மனைவி இதனை வெறுப்புடன் பார்த்ததாகக் கூறியுள்ளது.

    இருந்தபோதிலும், அந்த நினைவஞ்சலி நடந்த விளையாட்டரங்கில் தென்னாப்பிரிக்க மக்கள் மண்டேலாவின் மரணத்தை ஆடல், பாடல்களுடன் கொண்டாடியே தமது அஞ்சலியை செலுத்தினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மண்டேலா நினைவு கூட்டத்தில் ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top