புத்தளத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் மூன்று பலியானார்கள்.
புத்தளம் மதுரன்குளி பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் மோட்டார் வாகனமும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டுள்ளன. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைணகளுக்காக கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று புத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment