• Latest News

    December 30, 2013

    தலைநகரின் இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு வீடுகளை கையளிக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்

    புதிய வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்படும் பொழுது த லைநகரத்தில் வாழும் இன விகிதாசாரத்தை கருத்திற் கொண்டு அதனடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அவர் இதனை தெரிவித்துள்ளார் .
    மேலும் அவர் ஆற்றிய உரையில், கொழும்பில் கட்டப்படும் தொடர்மாடி வீடுகளில் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான வீடுகள் தலைநகரத்தில் கட்டப்பட்டு வருகின்றன. பல சிறியரக வீடுகளிலிருந்த மக்களுக்கு தொடர்மாடி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன

     இவ்வாறு வழங்கப்படும் பொழுது ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிப்பதை பல வீடுகளில் நான் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு புதிய தொடர்மாடி வீடுகள் வழங்கப்படும் பொழுது இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். புதிய வீடுகள் கட்டப்பட்டு கையளிக்கப்படும் பொழுது தலைநகரத்தில் வாழும் இன விகிதாசாரத்தை கருத்திற் கொண்டு அதனடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ளார் .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைநகரின் இனவிகிதாசாரத்தை கருத்திற் கொண்டு வீடுகளை கையளிக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top