நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு தரம் ஒன்றுக்கு மாணவர்களை
இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெறும் இன்றைய வேளையில் சம்மாந்துறை கல்வி
வலயத்துக்கான நிகழ்வு சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் (2014-01-16) இடம்பெற்றது.
சம்மாந்துறை கல்வி வலயமும் சம்மாந்துறை முஸ்லீம் மகளிர்
வித்தியாலயமும் இணைந்து முஸ்லீம் மகளிர் வித்தியாலய அதிபர் ரீ.எம்.தௌபீக்
தலைமையில்இடம்பெற்ற இன்றைய நிகழ்வில்
பிரதம
அதிதியாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் கலந்து
கொண்டதுடன் விசேட அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.உமர் மௌலானா
மற்றும் பிரதேசசபை உறுப்பினரும் சமாதான கல்வி பிரிவின் இணைப்பாளருமான
ஏ.ஏ.முகம்மட், பாடசாலை திட்ட அமைப்பாளர் திருமதி கே.கே.அஹ்மட் பிரதி அதிபர் தாகா
நளீம் போன்றோரும் பெரும் திரளான பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்துக்கு என இவ்வருடத்துக்கு 220 மாணவர்கள் தரம்
ஒன்றுக்கு இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக இப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வின் போது இப்பாடசாலையில் கல்வி பயிலும்
மாணவச்சிறார்களினது கலை நிகழ்ச்சியும்
இடம்பெற்றது.






0 comments:
Post a Comment