• Latest News

    January 12, 2014

    இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி

    இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

    இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களையும் இரண்டாம் இனிங்சில் 359 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

    பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இனிங்சில் 388 ஓட்டங்களை பெற்றது.

    இந்நிலையில் தனது இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 137 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

    இந்த போட்டியை வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி 1:0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top